ஸ்பெயினில் கழிவு நீரில் கரோனா வைரஸ்

ஸ்பெயினின் பார்சிலோனா பல்கலைக்கழகம் ஜுன் 26ஆம் நாள் வெளியிட்டஅறிக்கை ஒன்றில், 2019ஆம் ஆண்டு மார்சில் சேகரிக்கப்பட்ட கழிவு நீரின்மாதிரியை அண்மையில் சோதனை செய்ததில் கரோனா வைரஸ்இருந்துள்ளதை இப்பல்கலைக்கழகத்தின் தலைமையிலுள்ள ஆய்வுக் குழுகண்டறிந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஸ்பெயினில் கழிவு நீரில் கரோனா வைரஸ்

ஸ்பெயினின் பார்சிலோனா பல்கலைக்கழகம் ஜுன் 26ஆம் நாள் வெளியிட்ட
அறிக்கை ஒன்றில், 2019ஆம் ஆண்டு மார்சில் சேகரிக்கப்பட்ட கழிவு நீரின்
மாதிரியை அண்மையில் சோதனை செய்ததில் கரோனா வைரஸ்
இருந்துள்ளதை இப்பல்கலைக்கழகத்தின் தலைமையிலுள்ள ஆய்வுக் குழு
கண்டறிந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன், இவ்வாண்டு ஜனவரி 15ஆம் நாள் சேகரிக்கப்பட்ட கழிவு நீரில்
இக்குழுவினர் கரோனா வைரஸ் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். ஆனால்,
ஸ்பெயினில் முதலாவது கரோனா வைரல் பாதிப்பு பிப்ரவரி 25ஆம் நாள் தான்
என்று தெரிவிக்கப்பட்டது.

இக்குழுவுக்கு தலைமை தாங்கும் உயிரியல் பேராசிரியர் கூறுகையில்,
பார்சிலோனா நகரின் சுற்றுலாத் துறை பெரும் வளர்ச்சியடைந்து வருகிறது.
அங்கு செல்லும் பயணிகள் அதிகம். மற்ற நாடுகளிலும் இத்தகைய நிலைமை
நிலவுவதற்கு வாய்ப்புண்டு என்று இந்த ஆய்வு முடிவு எடுத்துக்காட்டுவதாக
கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com