சீனத் தேசிய பாதுகாப்பை ஹாங்காங் பேணிக்காப்பது பற்றிய சட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது

ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் அரசுப் பணியாளர் பணியகத்தின் தலைவர் நியெ டெச்சுவான் 26-ஆம் நாள் கூறுகையில், ஹாங்காங் மீது அன்பு மற்றும் அக்கறை காட்டும் விதம் தேசியப் பாதுகாப்பை ஹாங்காங் பேணிக்காப்பதற்கான சட்டம் உருவாக்கப்பட்டது என்றார்.

ஹாங்காங்கின் நீண்டகால வளர்ச்சி மற்றும் நிதானத்துக்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் மூலம், “ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற கொள்கை மேலும் பெரும் வளர்ச்சி வாய்ப்பைப் பெறும் என்று அவர் கூறினார். 

கடந்த ஆண்டில், சில அரசுப் பணியாளர்களின் தலைமையில், குறிப்பிட்ட முறையின் விதி திருத்தத்தை எதிர்த்து பேரணி மேற்கொண்டனர். இது, கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. ஹாங்காங் அரசுப் பணியாளர்கள் விசுவாசமாக இருக்க வேண்டும். ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும். எனவே, தேசியப் பாதுகாப்பைக் கருதி சீனா சட்டமியற்றுவதன் முக்கிய நோக்கம் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை திருத்தி சீரமைக்க வேண்டும் என்பது தான். ஹாங்காங்கின் நீண்டகால வளர்ச்சிக்கும், “ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற கொள்கையைச் செயல்படுத்துவதற்கும் இது முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறினார்.

ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் அரசியல் மற்றும் உள்பிரதேச விவகாரப் பணியகத்தின் தலைவர் ஜெங் குவொய் 26ஆம் நாள் கூறுகையில், சீன தேசிய பாதுகாப்பை ஹாங்காங் பேணிக்காப்பது தொடர்பான சட்டமியற்றலை எதிர்பார்த்து வருகின்றேன். தொடர்புடைய சட்டம், சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹாங்காங்கை சீர்குலைத்த வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்தி, சமூகப் பாதுகாப்பை பேணிக்காத்து, மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்திட வழிவகுக்கும் என்றார்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com