ஹுரியத் மாநாடு அமைப்பில் இருந்து சையத் அலி கிலானி விலகல்

ஹுரியத் மாநாடு அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவரான சையத் அலி கிலானி விலகியுள்ளார்.
சையத் அலி கிலானி விலகல்
சையத் அலி கிலானி விலகல்


ஸ்ரீநகர்: ஹுரியத் மாநாடு அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவரான சையத் அலி கிலானி விலகியுள்ளார்.

90 வயதாகும் கிலானி, ஹுரியத் மாநாடு அமைப்பில் இருந்து விலகுவதாக ஆடியோ மூலம் செய்தி வெளியிட்டுள்ளார்.

"தற்போதிருக்கும் சூழ்நிலையை நன்கு ஆராய்ந்து, ஹுரியத் மாநாடு அமைப்பில் இருந்து விலகுவதென்று முடிவு செய்துள்ளேன்" என்று கிலானி தனது வெளியிட்ட ஆடியோ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹுரியத் மாநாடு அமைப்பில் இருந்து தான் விலகுவது குறித்து இரண்டு பக்க அறிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார். 

காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து பிரித்து தனி நாடாக அறிவிக்கப் போராடி வரும் அமைப்புதான் ஹுரியத் மாநாடு. இதன் தலைவராக சையத் அலி கிலானி இருந்து வந்தார்.

கடந்த இரண்டு ஆண்டு காலமாக கிலானிக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டிருப்பதால், கட்சி நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாமல் இருந்து வந்த நிலையில், இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com