சீனத் தேசிய பாதுகாப்புச் சட்டத்துக்கான ஆதரவு: பல்வேறு சமூக வட்டாரத்தினர்கள்

அமெரிக்க செனெட் அவை “ஹாங்காங் தன்னாட்சி மசோதாவை” ஏற்றுக்கொண்டது, ஹாங்காங் விவாகரத்தில்..
சீனத் தேசிய பாதுகாப்புச் சட்டத்துக்கான ஆதரவு: பல்வேறு சமூக வட்டாரத்தினர்கள்

அமெரிக்க செனெட் அவை “ஹாங்காங் தன்னாட்சி மசோதாவை” ஏற்றுக்கொண்டது, ஹாங்காங் விவாகரத்தில் கடுமையாக குறுக்கீடு செய்துள்ளதுடன், சீனா மற்றும் ஹாங்காங் நகரவாசிகளின் நலன்களை சீர்குலைத்து, சர்வதேச பொது ஒப்பந்தத்தையும் சர்வதேச உறவின் அடைப்படைக் கோட்பாட்டையும் கடுமையாக மீறியுள்ளது என்று ஹாங்காங்கின் பல்வேறு சமூக வட்டாரத்தினர் 27ஆம் நாள் தெரிவித்தனர்.

சீனத் தேசியப் பாதுகாப்பை ஹாங்காங் பேணிக்காப்பது பற்றிய சட்டமியற்றல் முக்கியத்துவம் வாய்ந்தது. இச்சட்டம் அமலாக்கப்பட்ட பின், ஹாங்காங் சிறந்த வளர்ச்சியைப் பெறும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

அமெரிக்க செனெட் அவை “ஹாங்காங் தன்னாட்சி மசோதாவை” ஏற்றுக்கொண்டது சர்வதேச சட்டத்தை கடுமையாக மீறும் நடவடிக்கையாகும். ஹாங்காங் விவகாரம் சீனாவின் உள் விவகாரமாகும். சீனாவின் உள் விவகாரங்களில் தலையிட எந்த வெளிப்புற சக்திகளுக்கும் அனுமதி இல்லை என்று பல நாட்டு பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் நடவடிக்கை சீனாவின் உள் விவகாரத்தில் குறுக்கீடு செய்யும் செயல் ஆகும். அமெரிக்காவுடன் சீனா போட்டியிடுவதை தடுப்பது இதன் முக்கிய நோக்கமாகும் என்று ரஷிய நெருநோக்கு ஆய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் பெல்யாயேவ் கூறினார்.

சொந்த நாட்டின் அமைதியையும் பாதுகாப்பையும் பேணிக்காக்கும் உரிமை அனைத்து நாடுகளுக்கும் உண்டு. ஹாங்காங்கில் அமைதி மற்றும் பாதுகாப்பை பேணிக்காக்கும் உரிமையைச் சீன அரசு கொண்டுள்ளது என்று நேபாளம் சீன ஆய்வு மையத்தின் செயல் தலைவர் பத்ராய் தெரிவித்தார்.

அமெரிக்காவிந் நடவடிக்கைகள் ஹாங்காங் விவகாரத்தில் கடுமையாக குறுக்கீடு செய்வதுடன், சீனா மற்றும் ஹாங்காங் நகரவாசிகளின் நலன்களை சீர்குலைத்து, சர்வதேச பொது ஒப்பந்தத்தையும் சர்வதேச உறவின் அடைப்படை கோட்பாட்டையும் கடுமையாக மீறியுள்ளது என்று பாகிஸ்தான் உயர் நிலை அரசியல் விமர்சகர் ஃபியாஸி ஜியானி கூறினார்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com