ஹாங்காங்கிற்கான தேசியப் பாதுகாப்புச் சட்டத்துக்கு ஆதரவு

ஹாங்காங்கிற்கான தேசியப் பாதுகாப்புச் சட்டம், “ஒருநாட்டில் 2 அமைப்புமுறைகள்” என்ற கொள்கையை நிலைநிறுத்தவும் மேம்படுத்தவும் உதவும் முக்கியச் சட்டமாகும்..
ஹாங்காங்கிற்கான தேசியப் பாதுகாப்புச் சட்டத்துக்கு ஆதரவு

 
ஹாங்காங்கிற்கான தேசியப் பாதுகாப்புச் சட்டம், “ஒருநாட்டில் 2 அமைப்புமுறைகள்” என்ற கொள்கையை நிலைநிறுத்தவும் மேம்படுத்தவும் உதவும் முக்கியச் சட்டமாகும் என்றும், இத்திட்டத்திற்கு எதிரான வெளிநாட்டுச் சக்திகளின் மேலாதிக்கச் செயல்களும் சூழ்ச்சிகளும் ஒருபோதும் பலிக்காது என்றும் ஹாங்காங்கின் பல்வேறு துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது பற்றி ஹாங்காங் மகளிர் சம்மேளனத்தின் கௌரவ துணைத்தலைவரான ஜின்லிங் பேசுகையில்,

ஹாங்காங்கிற்கான தேசியப் பாதுகாப்புச் சட்ட விவகாரத்தில் சில வெளிநாட்டுச் சக்திகள் பொறுப்பற்ற முறையில் கருத்து தெரிவித்து வருகின்றன.

சீனாவின் உள்விவகாரத்தில் வெளிப்படையாகத் தலையிடும் அச்சக்திகளின் போக்கு அவர்களின் இரட்டை வரையறை மற்றும் போலித்தனத்தை வெளிப்படுத்தியுள்ளன என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஹாங்காங் குவாங்தொங் சமூகச் சங்ககங்களின் கூட்டமைப்புத் தலைவரான காங் ஜுன் லாங், இவ்விவகாரத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கவாதத்துக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

அதோடு, ஹாங்காங் குழப்பம் மற்றும் சிரமங்களிலிருந்து வெளிவர உதவியளிக்கும் வகையில் மத்திய அரசினால் வகுக்கப்பட்டுள்ள இச்சட்டத்தைத் தாம் முழுமையாக ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com