மக்களுக்கு நன்மை அளிக்கும் திட்டப்பணியை உருவாக்க வேண்டும்: ஷி ஜின்பிங் 

சீனாவின் ஜின்ஷாஜியாங் ஆற்றில் அமைந்துள்ள “வூதொங்தே” நீர் மின் நிலையத்தின் முதலாவது இயந்திரம் 29ஆம் நாள் மின் உற்பத்தியைத் தொடங்கியது.

சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் இதற்கு வாழ்த்து தெரிவித்ததோடு, கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் தன் அன்பினை வெளிப்படுத்தினார். அதோடு, உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பு முன்னுரிமை மற்றும் தூய்மையான வளர்ச்சி முறையைக் கடைப்பிடித்து, ஜின்ஷாஜியாங் ஆற்றின் வளங்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்றும், வளர்ச்சியையும் பாதுகாப்பையும் நனவாக்கும் அடிப்படையில் மக்களுக்கு நன்மை புரிய வேண்டும் என்றும் ஷி ஜின்பிங் வலியுறுத்தினார்.

யுன்னான் மற்றும் சிச்சுவான் மாநிலங்களின் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நீர் மின் நிலையத்தின் அனைத்து இயந்திரங்களும் 2021ஆம் ஆண்டு ஜுலைத் திங்களுக்குள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.

தகவல்:  சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com