ஆப்கன் கார் வெடிகுண்டு தாக்குதலில் 23 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெல்மண்ட் மாகாணத்தில் கார் வெடிகுண்டு மற்றும் ராக்கெட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதில் பொதுமக்கள் 23 பேர் திங்கள்கிழமை உயிரிழந்தனர். 


காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெல்மண்ட் மாகாணத்தில் கார் வெடிகுண்டு மற்றும் ராக்கெட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதில் பொதுமக்கள் 23 பேர் திங்கள்கிழமை உயிரிழந்தனர். 

இதுகுறித்து மாகாண ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், "சன்ஜின் மாவட்ட சந்தையில் கார் வெடிகுண்டு மற்றும் ராக்கெட் குண்டுகள் மூலம் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குழந்தைகள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர்' என்று கூறப்பட்டது. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காததால், அதுபற்றி வேறு எந்த தகவலும் அந்த அறிக்கையில் இடம்பெறவில்லை. 

எனினும் இந்த தாக்குதலை தலிபான்கள் நடத்தியதாக ராணுவமும், ராணுவம் நடத்தியதாக தலிபான்களும் குற்றஞ்சாட்டினர்.  இதுபற்றி தலிபான் செய்தித்தொடர்பாளர் கரி யூசஃப் அகமது கூறுகையில், "தலிபான்கள் இந்த தாக்குதலை நடத்தவில்லை. ராணுவமே ராக்கெட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது' என்று தெரிவித்தார்.  

ஆனால் தலிபான்களே பொதுமக்களை குறிவைத்து காரில் வெடிகுண்டு வைத்தும், ராக்கெட் குண்டுகளை பயன்படுத்தியும் தாக்குதல் நடத்தியதாக ராணுவம் தெரிவித்தது.  சம்பவம் நிகழ்ந்த இடத்தில் ராணுவ நடவடிக்கைகள் எதுவும் திங்கள்கிழமை நடைபெறவில்லை என்றும்,  காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்து தலிபான்கள் இருவர் உயிரிழந்ததாகவும் ராணுவம் தெரிவித்தது.  

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கனி வெளியிட்ட அறிக்கையில், "பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவது இஸ்லாம் மதத்துக்கும், மானுட தர்மங்களுக்கும் எதிரானது. தலிபான்கள் வன்முறையை விட்டொழித்து, அரசுடன் பேச்சுவார்த்தையை தொடங்கவேண்டும்' என்று வலியுறுத்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com