சீன நிறுவனங்களின் உரிமைகளைக் காக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு: சீன வெளியுறவுத் துறை

சீன நிறுவனங்களின் தொழில் உரிமைகளைக் காக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு என்று 59 செயலிகள் தடை விவகாரத்தில் சீன வெளியுறவுத்துறை கருத்துத் தெரிவித்துள்ளது.
சீன நிறுவனங்களின் தொழில் உரிமைகளைக் காக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு என்று 59 செயலிகள் தடை விவகாரத்தில் சீன வெளியுறவுத்துறை கருத்துத் தெரிவித்துள்ளது.
சீன நிறுவனங்களின் தொழில் உரிமைகளைக் காக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு என்று 59 செயலிகள் தடை விவகாரத்தில் சீன வெளியுறவுத்துறை கருத்துத் தெரிவித்துள்ளது.

பெய்ஜிங்: சீன நிறுவனங்களின் தொழில் உரிமைகளைக் காக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு என்று 59 செயலிகள் தடை விவகாரத்தில் சீன வெளியுறவுத்துறை கருத்துத் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக, செல்லிடப்பேசி மற்றும் இதர மின்னணு கருவிகளில் பயன்படுத்தக் கூடிய 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு திங்களன்று உத்தரவிட்டுள்ளது. 

தடை செய்யப்பட்டுள்ள அந்த செயலிகளில், பரவலாக பயன்படுத்தப்படக் கூடிய "டிக்டாக்', "ஷேர் இட்', "கேம் ஸ்கேனர்' உள்ளிட்ட செயலிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் சீன நிறுவனங்களின் தொழில் உரிமைகளைக் காக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு என்று செயலிகள் தடை விவகாரத்தில் சீன வெளியுறவுத்துறை கருத்துத் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பெய்ஜிங்கில் தினசரி நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் செவ்வாயன்று சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சோ லிஜ்ஜன் கூறியதாவது:

இந்திய அரசு சீன நிறுவனங்களுக்கு விடுத்துள்ள நோட்டீஸ் குறித்து நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். சூழலின் தன்மை குறித்து ஆராய்ந்து வருகிறோம்.

சீன நிறுவனங்கள் தாங்கள் தொழில் செய்யும் நாடுகளின் உள்ளூர் சட்ட திட்டங்கள் மற்றும் சர்வதேச தொழில் நடைமுறை சட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதேநேரம் சீன நிறுவனங்களின் தொழில் நடத்தும் உரிமைகளைக் காக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு       

சீனா மற்றும் இந்தியா இடையேயான நடைமுறை ஒத்துழைப்பு என்பது இரு தரப்பிற்கும் பலனளிக்க கூடியதாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com