இத்தாலியில் கரோனா பலி எண்ணிக்கை குறைந்தது: சுகாதாரத்துறை

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு ஆறு பேர் மட்டும் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை குறைந்துள்ளதாகத் தேசிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
italy corona death
italy corona death

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு ஆறு பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை குறைந்துள்ளதாகத் தேசிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, இத்தாலியில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,40,436 ஆக உள்ளது. இதுவரை கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 34,744ஐ எட்டியுள்ளது. தற்போது மருத்துவச் சிகிச்சையில் 16,496 பேர் உள்ளனர். 

தற்போது, வடக்கு லோம்பார்டி (10,823 பேர்) மற்றும் பீட்மாண்ட் (1,490), மற்றும் மத்திய எமிலியா ரோமக்னா (1,032) என மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 

வடமேற்கு ஆஸ்டா பள்ளத்தாக்கு (3), தெற்கு பசிலிக்காடா (3), மத்திய அம்ப்ரியா (9), சார்டினியா தீவு (14) மற்றும் தெற்கு கலாப்ரியா (26) எனக் குறைந்த அளவிலானோர் சிகிச்சையில் உள்ளனர். 

சிகிச்சை பெற்று வருபவர்களில் தற்போது 96 பேர் மட்டுமே தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1,120 பேர் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 15,280 பேர் லேசான அறிகுறிகளுடன் இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 305 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து இதுவரை 1,89,196 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com