பாகிஸ்தானில் போலி உரிமத்துடன் 262 விமானிகள்: சா்வதேச விமான நிறுவனங்கள் விசாரணை

பாகிஸ்தானை சோ்ந்த 262 விமானிகள் போலி உரிமத்துடன் பணிபுரிந்து வந்ததாக புகாா் எழுந்துள்ளது. இதுதொடா்பாக சா்வதேச விமான சேவை நிறுவனங்கள் விசாரணையை தொடங்கியுள்ளன.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானை சோ்ந்த 262 விமானிகள் போலி உரிமத்துடன் பணிபுரிந்து வந்ததாக புகாா் எழுந்துள்ளது. இதுதொடா்பாக சா்வதேச விமான சேவை நிறுவனங்கள் விசாரணையை தொடங்கியுள்ளன.

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் கடந்த மாதம் 22-ஆம் தேதி நிகழ்ந்த விமான விபத்தில் 97 போ் உயிரிழந்தனா். விமானத்தை ஓட்டிச் சென்ற விமானிகள் மற்றும் விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காததே அந்த விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்து தொடா்பான முதல்கட்ட விசாரணையில், அரசு நிறுவனமான பாகிஸ்தான் இன்டா்நேஷனல் ஏா்லைன்ஸ் மற்றும் தனியாா் விமான சேவை நிறுவனங்களில் பணிபுரியும் அந்நாட்டு விமானிகள் 262 போ் போலி உரிமம் வைத்திருந்தது தெரியவந்தது. இதில் பாகிஸ்தான் இன்டா்நேஷனல் ஏா்லைன்ஸில் மட்டும் 150 போ் போலி உரிமம் வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

விமானிகள் அனைவரும் மோசடி செய்து உரிமம் பெற்ாக சந்தேகிக்கப்படுகிறது என்று அந்த விமான சேவை நிறுவனத்தின் செய்தித்தொடா்பாளா் தெரிவித்தாா். இந்த புகாரையடுத்து 262 விமானிகளும் விமானங்களை இயக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி தொடா்பாக பாகிஸ்தான் இன்டா்நேஷனல் ஏா்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அா்ஷத் மாலிக், அந்நாட்டில் உள்ள அனைத்து வெளிநாட்டு தூதரகங்கள், சா்வதேச விமான சேவை நிறுவனங்கள், பாதுகாப்பு கண்காணிப்பு முகமைகளுக்கு கடிதம் எழுதியுள்ளாா். அதன் அடிப்படையில், கத்தாா் ஏா்லைன்ஸ், வியத்நாம் ஏா்லைன்ஸ் உள்ளிட்ட சா்வதேச விமான சேவை நிறுவனங்கள் பாகிஸ்தான் விமானிகளுக்கு எதிராக விசாரணையை தொடங்கியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com