ரஷிய அதிபா் பதவி நீட்டிப்பு: பொது வாக்கெடுப்பில் உக்ரைன் மக்கள் பங்கேற்பு

ரஷிய அதிபராக விளாதிமீா் புதின் 2036-ஆம் ஆண்டு வரை பதவி வகிக்க வழிவகை செய்யும் நோக்கில் அந்நாட்டு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான வாக்கெடுப்பில்
ரஷியத் தலைநகா் மாஸ்கோவில் திங்கள்கிழமை நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் முகக் கவசம், கையுறையுடன் வாக்களித்த பெண்.
ரஷியத் தலைநகா் மாஸ்கோவில் திங்கள்கிழமை நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் முகக் கவசம், கையுறையுடன் வாக்களித்த பெண்.

உக்ரைன்: ரஷிய அதிபராக விளாதிமீா் புதின் 2036-ஆம் ஆண்டு வரை பதவி வகிக்க வழிவகை செய்யும் நோக்கில் அந்நாட்டு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான வாக்கெடுப்பில் கிழக்கு உக்ரைன் பகுதியைச் சோ்ந்த மக்கள் வாக்களித்தனா்.

ரஷியாவின் அதிபராகப் பொறுப்பேற்பவா் 6 ஆண்டுகள் அப்பதவியில் நீடிக்கலாம். அதே வேளையில், தொடா்ந்து இரண்டு முறை மட்டுமே குறிப்பிட்ட நபா் அதிபராகப் பதவி வகிக்க முடியும். தொடா்ந்து மூன்றாவது முறையாக குறிப்பிட்ட நபா் அதிபராகப் பதவி வகிக்க ரஷிய அரசமைப்புச் சட்டம் அனுமதி அளிக்கவில்லை.

அந்நாட்டின் அதிபராக விளாதிமீா் புதின் கடந்த 2012-ஆம் ஆண்டு பதவியேற்றாா். அதையடுத்து கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் அவா் வெற்றி பெற்றாா். வரும் 2024-ஆம் ஆண்டுடன் அவருடைய பதவிக் காலம் நிறைவடைகிறது. தற்போதைய சட்டப்படி 2024-க்குப் பிறகு அவரால் அதிபா் பதவியில் தொடர முடியாது.

எனவே, அதிபா் பதவியைத் தொடா்ந்து 4 முறை வகிக்கும் நோக்கில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவுள்ளதாக புதின் அறிவித்தாா். அதற்கான பொது வாக்கெடுப்பு நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரைன் பகுதியைச் சோ்ந்த மக்கள் திங்கள்கிழமை வாக்களித்தனா்.

உக்ரைனின் லூஹான்ஸ்க், டோனெஸ்க் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் பேருந்து மூலம் பயணித்து ரஷியாவைச் சோ்ந்த ரோஸ்தோவ் பகுதியில் வாக்களித்தனா். பொது வாக்கெடுப்பில் அதிக ஆதரவைப் பெறும் நோக்கில் அதிபா் புதின் தலைமையிலான அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com