கரோனா வைரஸ் தாக்கம்: ஊழியர்களுக்கு அன்புக் கட்டளை இட்டிருக்கும் டிவிட்டர்

கரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் டிவிட்டர் நிர்வாகம் தனது 5000 ஊழியர்களையும் வீட்டில் இருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.
Twitter admits malicious code
Twitter admits malicious code


சான் ஃபிரான்ஸிஸ்கோ: கரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் டிவிட்டர் நிர்வாகம் தனது 5000 ஊழியர்களையும் வீட்டில் இருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.

ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் டிவிட்டர் நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதே சமயம், ஊழியர்கள் தேவையில்லாமல் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதையும் கட்டுப்படுத்தி வைத்துள்ளது. அமெரிக்காவில் டிவிட்டர் அலுவலகம் திறந்தே உள்ளது. நேரில் வந்துதான் பணியாற்ற வேண்டும் என்பவர்கள் மட்டும் அலுவலகத்துக்கு வரலாம் என்று கூறப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க பணியாற்றும் அனைத்து ஊழியர்களும், வீட்டில் இருந்தே பணியாற்ற முடியும் என்றால், அதனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். கரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து ஊழியர்களை பாதுகாக்கும் வகையில் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டிருப்பதாகவும் டிவிட்டர் நிர்வாகம் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com