2019 அமெரிக்காவின் மனித உரிமை மீறல் பற்றிய அறிக்கை

2019ஆம் ஆண்டு அமெரிக்காவின் மனித உரிமை மீறல் பற்றிய அறிக்கையை சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் 13ஆம் தேதி வெளியிட்டது.

2019ஆம் ஆண்டு அமெரிக்காவின் மனித உரிமை மீறல் பற்றிய அறிக்கையை சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் 13ஆம் தேதி வெளியிட்டது.

அமெரிக்கா தனது குறுகிய புரிந்துணர்வை கட்டுக்கோப்பாகவும், உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் சுயநலனை வரையறையாகவும் கொண்டு, ஆதாரமில்லாத தரவுகளின்படி பல்வேறு நாடுகளின் மனித உரிமை பற்றிய அறிக்கையை ஆண்டுதோறும் உருவாக்குகிறது.

அமெரிக்கா தனது நெடுநோக்கு நலனுக்குப் பொருத்தமற்ற நாடுகள் மற்றும் பிரதேசங்களில் நிலவும் மனித உரிமைகளைக் குறைகூறுவதோடு, சொந்த நாட்டில் தொடர்ச்சியாகவும் பெருமளவிலும் ஏற்பட்டு வரும் மனித உரிமை மீறல்களைக் கண்டும் காணாதது போல செயல்படுகிறது என்று இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகளவில் துப்பாக்கிச் சூட்டு வன்முறைகள் மிகக் கடுமையாக உள்ள நாடு அமெரிக்கா ஆகும். மேலும், கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்காவில் நிகழ்ந்த பயங்கரவாத சம்பவங்கள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தவர்களின் ஆதிக்கத்துடன் தொடர்புடையவை என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தனது சர்வதேச ஆதிக்கத்தைப் பேணிக்காக்கும் விதமாக ஒருதரப்புவாதத்தைப் பின்பற்றி, மற்ற நாடுகளின் மனித உரிமையையும் சர்வதேச ஒழுங்கு மற்றும் அமைப்பு முறையையும் மிதித்து வருகிறது. சர்வதேச பொறுப்புகளைத் தட்டிக்கழித்து வரும் அமெரிக்காவின் செயல்களால், உலகின் பல இடங்களில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், கடுமையான மனித நேய நெருக்கடியும் நிகழ்ந்துள்ளது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com