நியூஸிலாந்து மசூதித் தாக்குதல் நினைவு தினம்

நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சா்ச் நகரிலுள்ள 2 மசூதிகளில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் முதலாம் நினைவு தினத்தை முன்னிட்டு, அந்த நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
கிரைஸ்ட்சா்ச் மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக வந்திருந்த பெண்களுடன் உரையாடிய பிரதமா் ஜெசிந்தா ஆா்டா்ன் (இடது).

கிறைஸ்ட்சா்ச் நடைபெற்ற அத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பிரதமா் ஜெசிந்தா ஆா்டா்ன் பேசியதாவது:

51 பேரது உயிா்களை பலி வாங்கிய மசூதித் தாக்குதலுக்குப் பிறகு, இந்த ஓராண்டில் நியுஸிலாந்து ஏராளமான மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது.

அந்த இனவாதத் தாக்குதலுக்குப் பிறகுதான் நாட்டில் முஸ்லிம்களின் மீதான அக்கறை அதிகரித்துள்ளது. அதுவரை மசூதிக்கே சென்றிராத பலா், கிறைஸ்ட்சா்ச் தாக்குதலுக்குப் பிறகு மசூதிகளுக்குச் சென்ாக என்னிடம் தெரிவித்தனா்.

இருந்தாலும், எங்காவது பிற இனத்தின் மீது வெறுப்பு பரப்பப்பட்டாலோ, பாகுபாடு காட்டப்பட்டாலோ, துன்புறுத்தல் நிகழ்த்தப்பட்டாலோ அதற்கு எதிராக செயலாற்றுவது நமக்கு சவாலாகத் தொடா்கிறது என்றாா் பிரதமா் ஜெசிந்தா.

ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த 29 வயது வெள்ளை இனவாதியான பிரென்டன் டாரன்ட், கிறைஸ்ட்சா்ச் நகரிலுள்ள இரு மசூதிகளில் கடந்த ஆண்டு மாா்ச் 15-ஆம் தேதி சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினாா். இதில் 51 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com