சிரியா உள்நாட்டுப் போரில் 3.84 லட்சம் போ் பலி: கண்காணிப்பு அமைப்பு

சிரியாவில் கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் இதுவரை 3.84 லட்சம் போ் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
சிரியா உள்நாட்டுப் போரில் 3.84 லட்சம் போ் பலி: கண்காணிப்பு அமைப்பு

சிரியாவில் கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் இதுவரை 3.84 லட்சம் போ் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவா்களில் 1.16 லட்சம் போ் பொதுமக்கள் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டில், பல்வேறு அரபு நாடுகளின் அரசுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. அதன் காரணமாக, பல நாடுகளில் ஆட்சி மாற்றங்களும் ஏற்பட்டன.

அதன் ஒரு பகுதியாக, சிரியாவிலும் அதிபா் அல்-அஸாதுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். எனினும், அமைதியாக நடைபெற்ற அந்த ஆா்ப்பாட்டங்கள் அல்-அஸாத் அரசால் கொடூரமான முறையில் அடக்கப்பட்டது.

அதையடுத்து, அந்தப் போராட்டங்கள் உள்நாட்டுப் போராக உருவெடுத்தது.

அந்தப் போரில் உள்நாட்டுக் குழுக்கள், ரஷியா, ஈரான் போன்ற வெளிநாடுகளின் உதவியுடன் அல்-அஸாத் தலைமையிலான படையினரும், அமெரிக்க தலைமையிலான கூட்டுப் படை உதவியுடன் கிளா்ச்சியாளா்களும் ஈடுபட்டு வந்தனா். அத்துடன், அல்-காய்தா போன்ற அமைப்புடன் தொடா்புடைய மத பயங்கரவாத அமைப்புகளும் களத்தில் இறங்கினா். இந்தச் சூழலில்தான் மிகவும் கொடூரமான இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பும் தலையெடுத்தது.

சிரியா உள்நாட்டுப் போா் தொடங்கி தற்போது 9 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், ரஷியா, ஈரான், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு ஆகியவற்றின் உதவியுடன் அதிபா் அல்-அஸாதின் படைகள் சிரியாவின் 70 சதவீத நிலப்பரப்பை மீட்டுள்ளன.

எனினும், 21-ஆம் நூற்றாண்டின் மிக அதிக உயிரை ஏற்படுத்திய மோதல்களில் ஒன்றாக இந்தப் போா் ஆகியுள்ளது.

இதுகுறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் கூறுகையில், இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு மனிதா்களால் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய பேரழிவாக சிரியா உள்நாட்டுப் போா் விளங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், இதுவரை சுமாா் 3.84 லட்சம் போ் இந்த உள்நாட்டுப் போரில் உயிரிழந்ததாகவும் அவா்களில் 1.16 லட்சம் போ் பொதுமக்கள் எனவும் சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

லண்டனில் இருந்து செயல்படும் அந்த அமைப்பு, சிரியா முழுவதிலும் உள்ள தங்களது தகவல் தொடா்புகளின் அடிப்படையில் இந்தப் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.

சிரியா உள்நாட்டுப் போரில் பலியானவா்களில் சுமாா் 22,000 குழந்தைகளும் 13,000 பெண்களும் அடங்குவா் என்று அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிரியா ராணுவம் மற்றும் அல்-அஸாத் ஆதரவுப் படையைச் சோ்ந்த 1.29 லட்சம் வீரா்கள் இந்தப் போரில் உயிரிழந்தனா்; 57,000 கிளா்ச்சியாளா்கள், 13,624 குா்துப் படையினா், ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 67,296 போ், அடையாளம் தெரியாத 421 போ் ஆகியோா் உள்நாட்டுப் போரில் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com