Enable Javscript for better performance
The American press releasing the truth about the World Uighur Conference- Dinamani

சுடச்சுட

    உலக உய்கூர் மாநாடு பற்றிய உண்மையை வெளியிட்ட அமெரிக்க செய்தி ஊடகம்

    By DIN  |   Published on : 17th March 2020 06:10 PM  |   அ+அ அ-   |    |  

    1

     

    “உலக உய்கூர் மாநாடு (the World Uyghur Congress)எனும் அமைப்பின் உண்மை:அமெரிக்காவின் ஆதரவுடன் சீன அரசைக் கவிழ்க்கும் வலது சாரி அமைப்பு”என்ற கட்டுரை அண்மையில் அமெரிக்காவின் கிரேன்ஸான் எனும் செய்தி ஊடக இணையத்தில் வெளியிடப்பட்டது.

    மனித உரிமை அமைப்பு என்ற பெயரில் இவ்வமைப்பு நிறுவப்பட்டது முதல் தற்போது வரை(the National Endowment for Democracy)அமெரிக்காவின் ஜனநாயகத்துக்கான தேசிய நிதியத்திலிருந்து நிதி பெற்று, சீனாவைப் பிரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது தொடர்பான தகவல் இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டது.

    உலக உய்கூர் மாநாட்டின் தலைமையகம் ஜெர்மனியின் முனிக் நகரில் அமைந்துள்ளது. அமெரிக்க அரசு பனிப்போர் சிந்தனையில் சீனாவுக்கு எதிராக நிறுவப்பட்ட ஒரு முக்கியமான அமைப்பு இதுவாகும். கடந்த ஆண்டுகளில், மேலை நாடுகளின் செய்தி ஊடகங்கள், சீனாவின் சின்ஜியாங் தொடர்பான உண்மைகளை திரித்துக் கூறி, தகவல்களை வெளியிட்டுள்ளன. இவை, அமெரிக்க அரசின் நிதி உதவி மற்றும் பியற்சியுடன் கம்யூனிஸ்ட் எதிர்ப்பில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாதிகள் திட்டமிட்ட செயலாகும்.

    மேலும், துருக்கியில் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் கிரோ வோல்வ்ஸ் (Gray Wolves)எனும் தீவிர வலது சாரி அமைப்புடன், உலக உய்கூர் மாநாடு தொடர்பை நிலைநிறுத்தி வருகின்றது. அத்துடன், சீனா மீது துருக்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உலக இவ்வமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். சீனா மீது போர் தொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் அச்சுறுத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக, பயங்கரவாத எதிர்ப்புத் துறையின் சீன நிபுணர் வாங் ஜியாங் கூறுகையில்,

    சிங்ஜியாங்கில் சீன அரசு மேற்கொண்டு வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை மீது, சீனாவை எதிர்க்கும் சக்திகள் 2018ஆம் ஆண்டு முதல் அவதூறு பரப்பி வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் போலி செய்திகளை உருவாக்குவதில் தீவிர நிலை காணப்பட்டுள்ளது. உண்மையாக, உய்கூர் தேசிய இனத்தின் மனித உரிமை மற்றும் வளர்ச்சியில் உலக உய்கூர் மாநாடு முற்றிலும் அக்கறை செலுத்தவில்லை. இது, அமெரிக்காவின் “பனிப்போர் சிந்தனை”விதமான அரசியல் கருவியாக மட்டும் உள்ளது என்று தெரிவித்தார்.

    தகவல்: சீன ஊடகக் குழுமம்


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp