இங்கிலாந்தில் ஒன்பது மாத குழந்தைக்கு கரோனா பாதிப்பு: அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்கள்

இங்கிலாந்தில் ஒன்பது மாத குழந்தைக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அக்குழநதையின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
ஒன்பது மாத குழந்தைக்கு கரோனா பாதிப்பு
ஒன்பது மாத குழந்தைக்கு கரோனா பாதிப்பு

மான்செஸ்டர்: இங்கிலாந்தில் ஒன்பது மாத குழந்தைக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அக்குழநதையின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 151 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

இந்நிலையில் இங்கிலாந்தில் ஒன்பது மாத குழந்தைக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அக்குழநதையின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

இங்கிலாந்தைப்  பொறுத்தவரை இதுவரை 1700 பேருக்கு மேல் கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 71 பேர் வைரஸ் பாதிப்பினால் மரணமடைந்துள்ளனர்.    

மான்செஸ்டரை சேர்ந்த ஒரு தம்பதியின் ஒன்பது மாத ஆண் குழநதைக்கு சளி மற்றும் காய்ச்சல் தொந்தவு  நீடித்ததால், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தையை சோதித்த மருத்துவர்கள் கரோனா நோய்த் தோற்று இருப்பதை உறுதி செய்தனர்.  இதையடுத்து மூவரும் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.     

பெற்றோர்களிருவருக்கும் கரோனா பாதிப்பு இல்லாத நிலையில் குழநதைக்கு மட்டும் பாதிப்பு உருவானது எப்படி என்பது குறித்து மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்     

முன்னதாக இங்கிலாந்தின் நார்போல்க் நகரத்தில் உள்ள ஜேம்ஸ் பாகெட் மருத்துவ பல்கலையில்,  பிறந்த குழந்தை ஒன்றுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com