புதிய ரக கரோனா வைரஸ் தடுப்பூசி ஆய்வில் சீனா முன்னேற்றம்

சீன இராணுவ அறிவியல் கழகத்தைச் சேர்ந்த மருத்துவ ஆய்வகத்தின் மூத்த அறிஞர் சென்
புதிய ரக கரோனா வைரஸ் தடுப்பூசி ஆய்வில் சீனா முன்னேற்றம்

சீன இராணுவ அறிவியல் கழகத்தைச் சேர்ந்த மருத்துவ ஆய்வகத்தின் மூத்த அறிஞர் சென் வெய் தலைமையிலான குழு, கொவைட்-19 நோய்க்கு எதிரான தடுப்பூசியை ஆராய்ச்சி செய்வதில் முன்னேற்றம் அடைந்துள்ளது.

தற்போது, இந்த தடுப்பூசி மருத்துவ ரீதியிலான சோதனைக் கட்டத்திற்கு வர மார்ச் 16-ஆம் தேதி இரவு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சீன ஊடகக் குழுமத்துக்கு சென் வெ அளித்த பேட்டியில்,

பன்னாட்டுத் தர நிர்ணயம் மற்றும் உள்நாட்டுச் சட்டத்துக்கு இணங்க, இத்தடுப்பூசியின் பாதுகாப்பு, பயன், தரக் கட்டுப்பாடு, உற்பத்தி ஆகியவை தொடர்பான ஆயத்தப் பணிகளை நிறைவேற்றியுள்ளோம் என்று தெரிவித்தார்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com