எப்போதுமே பாகிஸ்தான் பக்கம்தான் சீனா நிற்கும்: ஷி ஜின்பிங்

உலகமே கரோனா அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், அதன் தாயகமான சீனாவோ, எப்போதுமே பாகிஸ்தான் பக்கம்தான் நிற்போம் என்று இந்தியாவுக்கு சூசகமாகத் தகவல் தெரிவித்திருக்கிறது.
எப்போதுமே பாகிஸ்தான் பக்கம்தான் சீனா நிற்கும்: ஷி ஜின்பிங்


பெய்ஜிங்: உலகமே கரோனா அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், அதன் தாயகமான சீனாவோ, எப்போதுமே பாகிஸ்தான் பக்கம்தான் நிற்போம் என்று இந்தியாவுக்கு சூசகமாகத் தகவல் தெரிவித்திருக்கிறது.

சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்வி - சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான சந்திப்பு செவ்வாய்க்கிழமை பெய்ஜிங்கில் நடைபெற்றது.

அப்போது, ஷின் ஜின்பிங் பேசுகையில், சர்வதேச நிலை எவ்வாறு மாறும் என்பதைப் பற்றிக் கவலை இல்லை. எப்போதுமே பாகிஸ்தானுடன் தான் சீனா இணைந்து இருக்கும். சீனா - பாகிஸ்தான் இடையேயான நட்புறவு என்பது இரும்பால் பிணைக்கப்பட்டது போன்ற வலிமையான உறவு. இரு நாட்டு மக்களும் பயனடையும் வகையில் இந்த நல்லுறவை மேம்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

சீனா தனது எதிரி நாடாகக் கருதும் அமெரிக்காவுடன், இந்தியா நெருங்கிச் செல்வதும், சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இந்தியாவில் மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதாலும் அதிருப்தி அடைந்த சீனா, இந்தியாவின் எதிரி நாடாகக் கருதப்படும் பாகிஸ்தானுடன் நட்புறவை கொண்டாட விரும்புவதாக அறிவித்துள்ளதாகவே இது பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com