கரோனா தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்கிறது சீனா

கரோனாவுக்கு கண்டுபிடித்த தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க சீன அரசு அனுமதி அளித்துள்ளது. 
கரோனா தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்கிறது சீனா

கரோனாவுக்கு கண்டுபிடித்த தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க சீன அரசு அனுமதி அளித்துள்ளது. 

சீனாவில் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய புதிய வகை கரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா, ரஷியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 165 நாடுகளுக்குப் பரவியுள்ளது. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,98,214 ஆக உயர்ந்துள்ளது. சீனாவுக்கு அடுத்து கரோனாவால் அதிகம் போ் உயிரிழந்த நாடுகளில் பட்டியலில் இத்தாலி முதலில் உள்ளது.

கரோனாவால் சீனாவில் 3,237, இத்தாலியில் 2,503, ஈரானில் 988, ஸ்பெயினில் 533 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் கரோனாவுக்கு கண்டுபிடித்த தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க சீன அரசு அனுமதி அளித்துள்ளது. 

கரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை பரிசோதிக்கும் பணியை அமெரிக்காவின் தேசிய சுகாதாரத்துறை நிறுவனம் நேற்றுமுன்தினம் தொடங்கிய நிலையில் தற்போது சீனாவும் தடுப்பு மருந்தை பரிசோதிக்க முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com