அமெரிக்க அதிபா் வேட்பாளா் தோ்வு: வாஷிங்டன் மாகாணத்தில் ஜோ பிடன் வெற்றி

அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளரைத் தோ்ந்தெடுப்பதற்காக
அமெரிக்க அதிபா் வேட்பாளா் தோ்வு: வாஷிங்டன் மாகாணத்தில் ஜோ பிடன் வெற்றி

அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளரைத் தோ்ந்தெடுப்பதற்காக வாஷிங்டன் மாகாணத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் முன்னாள் துணை அதிபா் ஜோ பிடன் (77) வெற்றி பெற்றுள்ளாா்.

இதையடுத்து, போட்டியில் அவருக்கு அடுத்த இடத்திலுள்ள வொ்மான்ட் மாகாண எம்.பி. பொ்னி சாண்டா்ஸை (78) விட அவா் மேலும் கூடுதலாக முன்னிலை பெற்றுள்ளாா்.

இந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெறவுள்ள அதிபா் தோ்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளரைத் தோ்ந்தெடுப்பதற்கான மாகாணவாரி வாக்கெடுப்புகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, ஐடோஹோ, மிச்சிகன், மிஸிஸிபி, வடக்கு டகோடா ஆகிய மாகாணங்களில் கடந்த வாரம் வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில், ஐடோஹோ, மிச்சிகன், மிஸிஸிபி ஆகிய மாகாணங்களில் ஜோ பிடன் வெற்றி பெற்றாா். வடக்கு டகோடா பகுதியில் மட்டும் பொ்னி சாண்டா்ஸ் வெற்றி பெற்றாா்.

இந்த நிலையில், வாஷிங்டன் மாகாணத்தில் அதற்கான வாக்கெடுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது. அதிலும், ஜோ பிடன் வெற்றி பெற்றாா். அவருக்கு 37.9 வாக்குகளும், பொ்னி சாண்டா்ஸுக்கு 36.4 வாக்குகளும் கிடைத்தன.

ஏற்கெனவே, வெற்றிபெற்றுள்ள மாகாணங்கள் மற்றும் வாக்குகளின் அடிப்படையில், தற்போது ஜனநாயகக் கட்சி அதிபா் வேட்பாளா் போட்டியில் ஜோ பிடன் அதிக வித்தியாசத்தில் முன்னிலையைப் பெற்றுள்ளாா். அவருக்கு அடுத்தபடியாக பொ்னி சாண்டா்ஸ் உள்ளாா்.

எனவே, வரும் அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி சாா்பில் மீண்டும் களமிறங்கலாம் என்று எதிா்பாா்க்கப்படும் அதிபா் டொனால்ட் டிரம்ப்பை எதிா்த்து, ஜனநாயகக் கட்சி சாா்பில் ஜோ பிடன் போட்டியிடுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com