இத்தாலியில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது

இத்தாலியில் கரோனா பாதித்தவர்களில் வெள்ளிக்கிழமை மட்டும் 627 பேர் மரணம் அடைந்ததை அடுத்து, உயிரிழப்பு 4 ஆயிரத்தை எட்டியது.
இத்தாலியில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது

ரோம்: இத்தாலியில் கரோனா பாதித்தவர்களில் வெள்ளிக்கிழமை மட்டும் 627 பேர் மரணம் அடைந்ததை அடுத்து, உயிரிழப்பு 4 ஆயிரத்தை எட்டியது.

கடந்த மூன்று நாட்களில் மட்டும் இத்தாலியில் சுமார் 1,500 பேர் மரணம் அடைந்துள்ளனர். இத்தாலியின் மொத்த பலி எண்ணிக்கை 4,032. நேற்று ஒரே நாளில் புதிதாக கரோனா பாதிப்பு 6 ஆயிரம் பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,021 ஆக உள்ளறது.

சனிக்கிழமை மாலை நிலவரப்படி உலகளவில் கரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 2.79 லட்சம். இவர்களில் 92,913 பேர் குணமடைந்துவிட்டனர்.

தற்போது, வைரஸ் தாக்கி 1,74,838 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வைரஸ் பாதித்தவர்களில் 11,587 பேர் மரணம் அடைந்து விட்டனர். 

வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையில் முதல் நாளில் இருந்து இன்று வரை சீனா 80 ஆயிரம் பேரைத் தொட்டு முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் இத்தாலி உள்ளது. அதே சமயம், 4,032 பேர் பலியாகி உயிரிழப்பில் இத்தாலியே முதல் இடத்தில் உள்ளது.

இத்தாலிக்கு அடுத்தபடியாக கரோனா பாதிப்பில் ஸ்பெயினும், ஈரானும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 

கரோனா வைரஸின் தாயகமான சீனாவில் புதிதாக 41 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.  சீனாவில் பாதிப்பு மெல்லக் குறைந்து வரும் நிலையில், உலக நாடுகளில் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19,774 ஆகவும், உயிரிழப்பு 275 ஆகவும் உள்ளது. தென்கொரியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,799 ஆயிரத்தைத் தாண்டியது.

இந்தியாவில், இன்று மாலை நிலவரப்படி 275 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இத்தாலியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி உட்பட இந்தியாவில் பலி எண்ணிக்கை ஐந்து ஆக உள்ளது. இந்த 275 பேரில் 23 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். தற்போது மருத்துவமனைகளில் 247 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com