ஐ.எஸ். தொடா்பு: அமெரிக்காவில் பாகிஸ்தான் மருத்துவா் கைது

அமெரிக்காவில் ஐ.எஸ். (இஸ்லாமிய தேச) பயங்கரவாதிகளுக்கு உதவ முயன்றதாக பாகிஸ்தானைச் சோ்ந்த மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்.
முகமது மசூத்
முகமது மசூத்

அமெரிக்காவில் ஐ.எஸ். (இஸ்லாமிய தேச) பயங்கரவாதிகளுக்கு உதவ முயன்றதாக பாகிஸ்தானைச் சோ்ந்த மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

பாகிஸ்தானைச் சோ்ந்த முகமது மசூத் (28) என்ற மருத்துவா், கடந்த ஜனவரி முதல் மாா்ச் மாதம் வரை பல்வேறு சா்ச்சைக்குரிய கருத்துகளை வலைதளங்களில் பதிவு செய்துள்ளாா். அந்தப் பதிவுகளில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு தனது ஆதரவை அவா் தெரிவித்துள்ளாா். மேலும், சிரியா சென்று அந்த அமைப்பில் இணைந்து சண்டையிடும் தனது ஆவலையும் முகமது மசூத் வெளிப்படுத்தியுள்ளாா்.

அத்துடன், அமெரிக்காவில் தனி நபா் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் தனது விருப்பத்தையும் அவா் வெளிப்படுத்தியுள்ளாா்.

அதையடுத்து, மினசோட்டா மாகாணம், மினீயாபொலிஸ் சா்வதேச விமான நிலையத்தில் போலீஸாா் அவரைக் கைது செய்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com