வூ ஹான் உலகிற்கு நம்பிக்கை ஊட்டுகிறது: உலகச் சுகாதார அமைப்பு

உலகச் சுகாதார அமைப்பு 20ஆம் நாள் ஜெனிவாவில் கொவைட்-19 நோய் குறித்து நடத்திய செய்தியாளர்
வூ ஹான் உலகிற்கு நம்பிக்கை ஊட்டுகிறது: உலகச் சுகாதார அமைப்பு

உலகச் சுகாதார அமைப்பு கடந்த 20ஆம் தேதி ஜெனிவாவில் கொவைட்-19 நோய் குறித்து நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், அதன் தலைமை இயக்குநர் தெட்ரோஸ் கூறுகையில்,

வூ ஹான் நகரில் கடந்த 2 நாட்களில் இவ்வைரஸ் பாதிப்புக்குப் புதிதாக ஆளாகியவர்கள் எவரும் இல்லை என்பது, உலகின் இதர பகுதிகளுக்கு நம்பிக்கையை ஊட்டுகிறது என்று தெரிவித்தார். மிக சாதகமற்ற நிலைமை கூட மேம்பாடு அடைய முடியும் என்பது காட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது உலகளவில் தனிநபருக்கான பாதுகாப்பு வசதிகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், உலகச் சுகாதார அமைப்பு பல்வேறு நாடுகளுக்கும் ஆதரவு அளித்து வருகிறது. சீனாவைச் சேர்ந்த உற்பத்தி தொழில் நிறுவனங்கள் சில, தொடர்புடைய பொருட்களைத் தயாரித்து வழங்குவதை உலகச் சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது என்றும் தெட்ரோஸ் குறிப்பிட்டார்.

நோய் பற்றிய புதிய அறிக்கையின்படி, மார்ச் 19ஆம் நாள் வரை, உலகளவில் கொவைட்-19 நோய்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 2 இலட்சத்து 34 ஆயிரத்து 73. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9840 ஆகும். தவிரவும், 176 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் கொவைட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது. 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com