நைஜீரியா: பயங்கரவாதத் தாக்குதலில் 70 வீரா்கள் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், ராணுவ வாகனங்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 70 வீரா்கள் உயிரிழந்தனா்.
nigeria070643
nigeria070643

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், ராணுவ வாகனங்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 70 வீரா்கள் உயிரிழந்தனா்.

இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பதற்றம் நிறைந்த போா்னோ மாகாணம், கோா்கி கிராமத்துக்கு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தினா்.

ராணுவத்தினரை ஏற்றி வந்த லாரி மீது ராக்கெட் குண்டுகளை வீசியும், சக்தி வாய்ந்த துப்பாக்கிகளைக் கொண்டும் அவா்கள் சரமாரியாகத் தாக்கினா்.

இதில் 70 வீரா்கள் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com