பாரம்பரிய சீன மருத்துவம் பற்றி சீன ஊடகக் குழுமத்தின் நிகழ்ச்சி

சீன ஊடகக் குழுமத்தின் “உலக அளவில் பரவி வரும் நோய்க்கான மருத்துவம்” எனும் நிகழ்ச்சியில்

சீன ஊடகக் குழுமத்தின் “உலக அளவில் பரவி வரும் நோய்க்கான மருத்துவம்” எனும் நிகழ்ச்சியில் பாரம்பரிய சீன மருத்துவம் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி பெய்ஜிங் நேரப்படி 26ஆம் நாள் இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது. கொவைட்-19 நோய் சிகிச்சையில் பங்கெடுத்துள்ள சீன பாரம்பரிய மருத்துவத்தின் மருத்துவர்கள் வெளிநாட்டு மருத்துவர்களுடன் காணொளியின் மூலம் இந்நோய்க்கான மருத்துவச் சிகிச்சையில் பாரம்பரிய சீன மருத்துவத்தின் பயன் மற்றும் அனுபவங்களைப் பறிமாறிக்கொள்ள உள்ளனர்.

இந்தியா, பாகிஸ்தான், கனடா, பிரிட்டன், லெபனான், ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிவயற்றைச் சேர்ந்த பல மருத்துவர்களும் சீனாவின் 6 பாரம்பரிய மருத்துவ நிபுணர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வர். வெளிநாட்டு நிபுணர்கள் பாரம்பரிய சீன மருத்துவச் சிகிச்சையில் பல ஆண்டு அனுபவம் பெற்று, தேர்ந்த உள்ளூர் மருத்துவர்களாக மாறியுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த மலஷர் இதில் 11 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். தற்போது, அவர் புதுதில்லியில் மருத்துவச் சிகிச்சை மையத்தில் மருத்துவராக உள்ளார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com