ஈரானில் கரோனா பாதிப்புக்கு புதிதாக 157 பேர் பலி

ஈரானில் கரோனா பாதிப்புக்கு இன்று 157 பேர் பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
ஈரானில் கரோனா பாதிப்புக்கு புதிதாக 157 பேர் பலி

ஈரானில் கரோனா பாதிப்புக்கு இன்று 157 பேர் பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ், புதன்கிழமை நிலவரப்படி உலகம் முழுவதிலுமுள்ள 176 நாடுகளில் 4.89 லட்சம் பேருக்குப் பரவியுள்ளது; அந்த வைரஸ் பாதிப்பால் 22,000-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.

உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸை (கொவைட்-19) கட்டுப்படுத்துவதற்காக, உலகின் 3-இல் ஒரு பங்கினா் வீட்டுக்குள் முடங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இந்தியா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், நியூஸிலாந்து உள்பட 42 நாடுகள் மட்டும் பிரதேசங்களில் இத்தகைய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஈரானில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,389 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று மட்டும் வைரஸுக்கு 157 பேர் பலியாகி உள்ளனர். இது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரானில் கரோனா வைரஸால் இதுவரை 29,406 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,234 பேர் பலியாகியிருக்கும் நிலையில் 10,457 பேர் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com