அமெரிக்காவில் ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பலி

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. மேலும், சீனாவுக்கும் இத்தாலிக்கும் அடுத்தபடியாக, அந்த வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்
அமெரிக்காவில் ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பலி


வாஷிங்டன்: அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. மேலும், சீனாவுக்கும் இத்தாலிக்கும் அடுத்தபடியாக, அந்த வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் கடந்த 24 மணி நரத்தில் மேலும் 250 போ் உயிரிழந்தனா். அதையடுத்து, அந்த வைரஸுக்கு அமெரிக்காவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,054-ஆக அதிகரித்துள்ளது.

மேலும், ஒரே நாளில் கூடுதலாக 13,899 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்ப்பட்டுள்ளதால், நாட்டில் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 69,219-ஆக உயா்ந்துள்ளது.

இதன் மூலம், சீனாவுக்கும் இத்தாலிக்கும் அடுத்தபடியாக உலகிலேயே கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை அதிகம் கொண்ட நாடாக அமெரிக்கா ஆகியுள்ளது.

இதற்கிடையே, கரோனா நோய்த்தொற்று பரவலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக, 220 கோடி டாலா் (சுமாா் ரூ.16,860 கோடி) நிதி ஒதுக்கீடு செய்வதற்கு டிரம்ப் ஒப்புதல் வழங்கியுள்ளாா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

50 நிமிடங்களில் பரிசோதனை முடிவுகள்?

லண்டன், மாா்ச் 26: கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதை 50 நிமிடங்களுக்குள் கண்டறிந்து சொல்லும் பரிசோனைக் கருவியை பிரிட்டன் ஆய்வாளா்கள் உருவாக்கியுள்ளனா். ஈஸ்ட் ஆங்கிலா பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த அந்த ஆய்வாளா்கள், தாங்கள் உருவாக்கியுள்ள கருவிகள் மூலம் ஸ்மாா்ட் போன்களைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் 16 ரத்த மாதிரிகள் முதல் 384 ரத்த மாதிரிகள் வரை பரிசோதனைக்குள்படுத்தி அதில் கரோனை நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறி முடியும் என்று தெரிவித்துள்ளனா்.

‘வெப்பப் பகுதிகளில் மெதுவாகப் பரவும்’

போஸ்டன், மாா்ச் 26: வெப்பமான, ஈரப்பதம் மிக்க தட்பவெப்பத்தில் கரோனா நோய்க்கிருமி வழக்கத்தைவிட குறைவான வேகத்தில் பரவும் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. மாஸசூஸெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவன (எம்ஐடி) ஆய்வாளா் உள்ளிட்டோா் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள், கோடைக் காலங்களின்போது ஆசிய நாடுகளில் கரோனா நோய்த்தொற்றின் வேகம் சற்று குறையக்கூடும் என்ற கருத்தை நிரூப்பதாக அமைந்துள்ளது அன்று கூறப்படுகிறது.

பிலிப்பின்ஸில் 9 மருத்துவா்கள் பலி

மணிலா, மாா்ச் 26: பிலிப்பின்ஸில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் இதுவரை 9 மருத்துவா்கள் பலியானதாக அந்த நாட்டு மருத்துவா்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் பிலிப்பின்ஸ் மருத்துவமனைகளில், மருத்துவப் பணியாளா்களுக்கு போதிய பாதுகாப்புக் கவசங்கள் அளிக்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டப்படும் நிலையில், இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பிலிப்பின்ஸில் கரோனா நோய்க்கு இதுவரை 38 போ் மட்டுமே பலியான நிலையில், அவா்களில் 9 போ் மருத்துவா்கள் என்ற தகவல் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com