கொவைட்-19 நோய்க்கு எதிரான போராட்டம்: ஷி ஜின்பிங் கருத்து

கொவைட்-19 நோய்க்கு எதிரான போராட்டம் தொடர்பான 20 நாடுகள் குழுவின் சிறப்பு உச்சி..
கொவைட்-19 நோய்க்கு எதிரான போராட்டம்: ஷி ஜின்பிங் கருத்து

கொவைட்-19 நோய்க்கு எதிரான போராட்டம் தொடர்பான 20 நாடுகள் குழுவின் சிறப்பு உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் 26ஆம் நாள் கலந்து கொண்டார். இதில், சீனாவின் கருத்தை முன்வைத்த ஷி ஜின்பிங், நோய்க்கு எதிரான இந்த உலகப் போருக்கு வழிமுறைகளை வழங்கினார்.

முதலாவதாக, ஒற்றுமையோடு இருத்தல். ஷி ஜின்பிங் கூறுகையில், தொற்று நோய் மனிதர்களின் பொது எதிரி. தற்போது, உறுதியான நம்பிக்கை மற்றும் ஒற்றுமை சர்வதேச சமூகத்துக்க மிகவும் தேவைப்படுகிறது. கடினமான காலத்தில் ஒற்றுமையுடன் இருப்பது தான் பலம் என்று கூறினார்.

இரண்டாவதாக, ஒத்துழைப்பை வலுப்படுத்துதல். தகவல் பகிர்வை வலுப்படுத்தி, மருந்துப் பொருட்கள், நோய் தடுப்பூசி ஆய்வு, நோய் தடுப்பு உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்புகளை மேற்கொள்வது, எல்லை கடந்து பரவும் நோயை உரிய முறையில் தடுப்பதற்கு உதவும் என்று தெரிவித்தார்.

மூன்றாவதாக, ஒருங்கிணைந்த செயல்பாட்டை வலுப்படுத்துதல். சர்வதேச அளவில் பொருளாதாரக் கொள்கையின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, பயனுள்ள நிதிக் கொள்கையைச் செயல்படுத்த வேண்டும் என்று ஷி ஜின்பிங் தெரிவித்தார். 

சர்வதேசச் சந்தைக்கு மூல மருந்துகள், அத்தியாவசியப் பொருட்கள், நோய் தடுப்புப் பொருட்கள் முதலிய உற்பத்திப் பொருட்களின் விநியோகத்தை சீனா அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com