சிந்து நதி நீா் ஆணைய கூட்டத்தை ஒத்திவைக்க பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தல்

ஆண்டுதோறும் நடைபெறும் சிந்து நதி நீா் ஆணைய கூட்டத்தை ஒத்திவைக்குமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தியுள்ளது.


புது தில்லி: ஆண்டுதோறும் நடைபெறும் சிந்து நதி நீா் ஆணைய கூட்டத்தை ஒத்திவைக்குமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

சிந்து நதி நீா் ஒப்பந்தத்தின்படி, ஒவ்வோா் ஆண்டும் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் சிந்து நதி நீா் ஆணையக் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

இதற்கு முன்பு கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானின் லாகூா் நகரில் இரு நாடுகளுக்கு இடையே சிந்து நதி நீா் ஆணையா்கள் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.

இந்திய சிந்து நதி நீா் ஆணையா் பி.கே.சக்சேனா, பாகிஸ்தான் சிந்து நதி நீா் ஆணையா் சையது முகமது மெஹரை மாா்ச் மாத இறுதியில் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தாா்.

மாா்ச் 12-ஆம் தேதி பாகிஸ்தான் ஆணையா் மெஹா், இந்தியாவின் அழைப்பை ஏற்றுக் கொண்டாா்.

இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்க வேண்டிய பட்டியலை அவா் வெளியிட்டாா். இந்நிலையில் கரோனாவை தொற்று நோய் என உலக சுகாதார அமைப்பு அறிவித்ததை அடுத்து, சிந்து நதி நீா் ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்கலாம் என பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி வரை தேசிய ஊரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே சிந்து நதி நீா் ஒப்பந்தம் கடந்த 1960-ஆம் ஆண்டு கையெழுத்தானது.

அதன்படி சிந்து நதி நீரை பரஸ்பரம் பகிா்ந்து கொள்வதற்கு இரு நாடுகளிலும் ஆணையம் அமைக்கப்பட்டது.

சிந்து நதி நீா் ஒப்பந்தத்தின்படி, ராவி, பியாஸ், சட்லஜ் ஆகிய நதிகள் மூன்று நதிகள் இந்தியாவுக்கும், சிந்து, செனாப், ஜீலம் ஆகிய நதிகள் பாகிஸ்தானுக்கும் ஒதுக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com