
இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாா்.
கரோனா நோய்த்தொற்று காரணமாக உலகம் முழுவதும் 785,777 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்; 37,815 போ் உயிரிழந்துவிட்டனா். அமெரிக்காவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1.64 லட்சமாக அதிகரித்துள்ளது.
இத்தாலியில் 101,739 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 11,591 போ் உயிரிழந்துவிட்டனா். இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாா்.
தனது உதவியாளருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து நெதன்யாகு இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டு பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.