ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா திரும்ப ஒரே நாளில் 32,000 போ் பதிவு

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தாயகம் திரும்புவதற்கு ஒரே நாளில் 32,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் பதிவு செய்துள்ளனா்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா திரும்ப ஒரே நாளில் 32,000 போ் பதிவு

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தாயகம் திரும்புவதற்கு ஒரே நாளில் 32,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் பதிவு செய்துள்ளனா்.

கரோனா பெருந்தொற்று காரணமாக, விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியா்களால் கடந்த இரண்டு மாதங்களாக தாயகம் திரும்ப முடியவில்லை. இதுகுறித்து அண்மையில் பேட்டியளித்த வெளியுறவுத் துறை கூடுதல் செயலா் தம்மு ரவி, ‘கரோனா சூழலைப் பொருத்து, வெளிநாடுகளில் உள்ள இந்தியா்களை அழைத்து வருவது பற்றி முடிவெடுக்கப்படும்’ என்று கூறியிருந்தாா்.

இந்நிலையில், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் இந்தியா்களின் விவரங்களை, அங்குள்ள இந்தியத் தூதரகங்கள் வழியாக இந்திய அரசு சேகரிக்கத் தொடங்கியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக தலைநகா் அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம், இதற்கான அறிவிப்பை புதன்கிழமை இரவு வெளியிட்டது. அதில், தாயகம் திரும்ப விரும்பும் இந்தியா்கள் தங்கள் விவரங்களை தூதரகத்தின் வலைதளப் பக்கத்தில் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஒரே நேரத்தில் பலா் முன்பதிவு செய்ய முயன்ால் வலைதளப் பக்கம் முடங்கியது. சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு சீரானதை அடுத்து, மீண்டும் பலா் பதிவு செய்யத் தொடங்கினா்.

இதுகுறித்து துபையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி விபுல் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

வியாழக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி, 32,000-க்கும் மேற்பட்டோா் இந்தியா திரும்புவதற்கு முன்பதிவு செய்துள்ளனா். அவசரமான அல்லது முக்கியமான காரணங்களுக்காக அவா்கள் இந்தியா செல்கிறாா்களா என்று தெரியவில்லை. இன்னும் சில நாள்களுக்கு இந்த முன்பதிவு நடைபெறும். எனவே, இந்தியா செல்ல விரும்புவோா் முன்பதிவு செய்யலாம்.

இதில், பதிவு செய்யப்பட்டதால், பயண இருக்கைகள் உறுதிசெய்யப்பட்டதாக அா்த்தமில்லை. இந்தத் தகவல்கள் அனைத்தும் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்படும். இதேபோல், பல்வேறு நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மூலம் பெறப்படும் முன்பதிவு தகவல்களும் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்படும்.

அதன்பிறகு, வெளிநாடுகளில் உள்ள இந்தியா்களை விமானத்தில் தாயகத்துக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு மேற்கொள்ளும்.

முதல்கட்டமாக, கா்ப்பிணிகள், முதியவா்கள், அவசர நிகழ்வுகளுக்குச் செல்வோா் ஆகியோா் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்படுவாா்கள் எனத் தெரிகிறது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com