சீனாவில் கரோனா தொற்று ஒன்றாகக் குறைந்தது

சீனாவில் கரோனா நோய்த் தொற்று ஒன்றாகக் குறைந்துள்ளதாகத் தேசிய சுகாதார ஆணையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. 
சீனாவில் கரோனா தொற்று ஒன்றாகக் குறைந்தது

சீனாவில் கரோனா நோய்த் தொற்று ஒன்றாகக் குறைந்துள்ளதாகத் தேசிய சுகாதார ஆணையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. 

கடந்த டிசம்பரில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத்தொடங்கிய கொடிய நோயான கரோனா தற்போது உலகம் முழுவதும் 210 பரவி மக்களை உலுக்கி வருகின்றது. 

கரோனாவுக்கு அந்த நாட்டில் மொத்த பாதிப்பு 82,875 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,633 பேர் பலியாகியுள்ள நிலையில், 77,685 பேர் குணமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

கரோனாவுக்கு புதிதாக ஒருவர் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்றுவரும் நிலையில், புதிதாக தொற்று எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹூபே மாகாணமும் அதன் தலைநகரான வூஹானிலும் கடந்த ஏப்ரல் 4 முதல் தொடர்ச்சியாக 28 நாட்களுக்கு எந்தவொரு கரோனா பாதிப்பும் பதிவாகவில்லை என்று உள்ளூர் சுகாதார ஆணையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. 

ஹூபேயின் தடுப்பு மற்றும் கரோனா வைரஸுக்கு எதிரான கட்டுப்பாட்டில் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் காணமுடிகிறது என்று ஹூபே துணை ஆளுநர் யாங் யுன்யான் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com