வட கொரிய அதிபர் கிம் நலமாக இருக்கிறார்: 20 நாள்களுக்குப் பின் விழாவில் பங்கேற்பு

பல்வேறு புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வடகொரிய தலைவர் கிம் ஜோங்-உன் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.
வட கொரிய அதிபர் கிம் நலமாக இருக்கிறார்: 20 நாள்களுக்குப் பின் விழாவில் பங்கேற்பு

பியாங்கியாங்: பல்வேறு புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வடகொரிய தலைவர் கிம் ஜோங்-உன் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

உரத் தொழிற்சாலை ஒன்றை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்துள்ளார் கிம் ஜோங்-உன். இந்த தகவலை கொரியாவின் மத்திய செய்தி மையம் இன்று வெளியிட்டுள்ளது.

உரத் தொழிற்சாலை திறப்பு விழாவில், தனது சகோதரி கிம் யோ ஜோங் மற்றும் மூத்த தலைவர்கள் பலருட்ன் கிம் ஜோங்-உன் பங்கேற்றார்.

உரம் தயாரிக்கும் நோக்கத்துடன் கட்டி முடிக்கப்பட்ட சஞ்சோன் பாஸ்படிக் உரத் தொழிற்சாலையை, தொழிலாளர் தினமான மே 1ம் தேதி திறந்து வைத்துள்ளார் கிம் ஜோங். சுமார் 20 நாள்களுக்குப் பிறகு கிம் ஜோங் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

ஏப்ரல் 11 ஆம் தேதிக்குப் பிறகு பொது நிகழ்ச்சிகள் எதிலும் கிம் பங்கேற்காத நிலையில், இதய அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து, அவர் இறந்துவிட்டார் என்றும் கோமா நிலையில் இருக்கிறார் என்றும் ஏராளமான உறுதியற்ற செய்திகள் பரவி வந்தன.

ஏப். 15 ஆம் தேதி நடைபெற்ற வட கொரிய நிறுவனரும் கிம்மின் தாத்தாவுடமான கிம் இல் சுங் பிறந்த நாள் விழாவில் பங்கேற்காததிலிருந்து கிம்மிற்கு உடல் நலமில்லை அல்லது அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்கிறார் என்பது போன்ற பல தகவல்கள் பரவின. ஆனால் அனைத்துக்கும் இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com