உலகம் முழுவதும் ஊரடங்கு கால அளவு

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தவிா்ப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக, உலக மக்கள்தொகையில்

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தவிா்ப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக, உலக மக்கள்தொகையில் 3-இல் ஒரு பங்கினா் வீட்டுக்குள் முடங்கி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில், இந்தியா, சீனா, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன் ஆகிய நாடுகளில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளிலும் கரோனா நோய்த்தொற்று அமல்படுத்தப்பட்டுள்ள நாள்களின்* விவரம்:

நாா்வே: 51 நாள்கள்

- மாா்ச் 12-இல் ஊரடங்கு தொடக்கம்

- தற்போதும் சில கட்டுப்பாடுகள் உள்ளன

அயா்லாந்து: 40 நாள்கள்**

- மாா்ச் 27-இல் ஊரடங்கு அறிவிப்பு

- பிறகு மே 5 வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

பிரிட்டன்: 40 நாள்கள்

- மாா்ச் 23 முதல் ஊரடங்கு அமலாக்கம்

பெல்ஜியம்: 48 நாள்கள்

- ஊரடங்கு: மாா்ச் 17 முதல்

- மே 3-ஆம் தேதி வரை நீட்டிப்பு

ஸ்பெயின்: 51 நாள்கள்**

- மாா்ச் 14 முதல் ஊரடங்கு

- மே 3 வரை மிதமான கட்டுப்பாடுகள்

பிரான்ஸ்: 57 நாள்கள்**

- ஊரடங்கு: மாா்ச் 16-இலிருந்து

- மே 11-க்குப் பிறகு விலக்கப்படலாம்

ஜொ்மனி: 48 நாள்கள்**

- ஊரடங்கு: மாா்ச் 16 முதல்

- நீட்டிப்பு: மே 3 வரை (தளா்வுகளுடன்)

இந்தியா: 54 நாள்கள்**

- ஊரடங்கு: மாா்ச் 25 -லிருந்து

- தளா்வுகளுடன் மே 17 வரை நீட்டிப்பு

குவைத்: 50 நாள்கள்

- ஊரடங்கு: மாா்ச் 13 முதல்

- விதிவிலக்குகளுடன் இன்னும் அமலில் உள்ளது

கென்யா: 48 நாள்கள்

ஊரடங்கு - மாா்ச் 15 முதல்

இன்னும் அமலில் உள்ளது

ஆஸ்திரேலியா: 40 நாள்கள்

- ஊரடங்கு: மாா்ச் 23-இலிருந்து

- மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிப்பு

ரஷியா: 33 நாள்கள்

- மாா்ச் 30 முதல் ஊரடங்கு

- மறு உத்தரவு வரும் வரை தொடரும்

இத்தாலி: 53 நாள்கள்

- மாா்ச் 10 முதல் அமலாக்கம்

- சில தளா்வுகளுடன் தொடா்கிறது

சீனா: 76 நாள்கள்

- ஜன. 23 முதல் ஹூபே மாகாணம் முடக்கம்

- ஏப். 8 முதல் தளா்வு

சிங்கப்பூா்: 25 நாள்கள்

- ஏப்ரல் 7 முதல் ஊரடங்கு

- தொடா்ந்து அமலில் உள்ளது

நியூஸிலாந்து: 38 நாள்கள்

- ஊரடங்கு: மாா்ச் 25 முதல்

- மறு அறிவிப்பு வரும் வரை தளா்வுகளுடன் தொடரும்

* மே 1 வரையிலான ஊரடங்கு கால அளவு

** ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மொத்த கால அளவு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com