ஷார்ஜா தீ விபத்துக்கு சிகரெட் துண்டு காரணமா?

ஷார்ஜாவில் 48 தளங்களைக் கொண்ட கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு சிகரெட் துண்டு காரணமாக இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.
ஷார்ஜா தீ விபத்துக்கு சிகரெட் துண்டு காரணமா?


ஷார்ஜாவில் 48 தளங்களைக் கொண்ட கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு சிகரெட் துண்டு காரணமாக இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

ஷார்ஜாவில் கடந்த 5-ஆம் தேதி 48 தளங்கள் கொண்ட கட்டடத்தில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. இந்த நிலையில்,  இந்தத் தீ விபத்துக்கு சிகரெட் துண்டு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது. 

இதுபற்றி காவல் துறை இயக்குநரும் (பொறுப்பு), தடயவியல் ஆய்வகத்தின் தலைவருமான அகமது ஹஜி அல் சர்கால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில்,

"இந்த விபத்து 90 சதவீதம் புகைத்தெறிந்த சிகரெட் துண்டு அல்லது எளிதில் நெருப்பு பற்றவைக்க பயன்படுத்தப்படும் சாதனம் மூலம் ஏற்பட்டிருக்கக்கூடும். இது மேல் தளத்திலிருந்து வீசப்பட்டு, 10-வது (முதல் 9 தளங்கள் வாகன நிறுத்துமிடம்) தளத்தில் விழுந்துள்ளது. அங்கிருந்துதான் தீ பற்றியிருக்கிறது. இருந்தபோதிலும், சரியான காரணத்தை காவல் துறையினர் விசாரணை மூலம் கண்டறிவார்கள். 

மொத்தம் 333 அபார்ட்மெண்ட்-களில், 233 இன்னும் மூடப்பட்டிருக்கிறது. அவை உரிமையாளர்களின் முன் திறக்கப்படும். 100 அபார்ட்மெண்ட்-கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதில் 26 முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. 34 தண்ணீர் மற்றும் புகையால் பாதிக்கப்பட்டுள்ளன. 40 அபார்ட்மெண்ட்-களின் கதவுகள் சேதமடைந்துள்ளன.

33 வாகனங்கள் சேதமடைந்துள்ளன, அதில் 16 சாலைகளில் இருந்துள்ளன, 17 கட்டடத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்துள்ளன. விபத்து நடக்கும்போது கட்டடத்தின் வாகன நிறுத்துமிடத்தில் 56 வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன, அதில் 39 சேதமடையவில்லை." என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com