உலகளவில் கரோனா பாதிப்பு 41 லட்சத்தைத் தாண்டியது: பலி எண்ணிக்கை 2,83,876 ஆனது

உலகளவில் கரோனா நோய்த் தொற்றுக்குப் பாதித்தோர் எண்ணிக்கை 41 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 
உலகளவில் கரோனா பாதிப்பு 41 லட்சத்தைத் தாண்டியது: பலி எண்ணிக்கை 2,83,876 ஆனது

உலகளவில் கரோனா நோய்த் தொற்றுக்குப் பாதித்தோர் எண்ணிக்கை 41 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கரோனா நோய்த் தொற்று உலகம் முழுவதும் 210-க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவுடன் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. எனினும், பல நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி உலகளவில் கரோனா பாதிப்பு 41 லட்சத்து 81 ஆயிரத்து 202 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 83 ஆயிரத்து 876 ஆக உள்ளது. இதில், 14 லட்சத்து 93 ஆயிரத்து 473 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 

கரோனா நோய்த் தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதுவரை 13 லட்சத்து 67 ஆயிரத்து 638 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 80 ஆயிரத்து 787 ஆக அதிகரித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com