சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் அவருடைய தாயும்

ஷிச்சின்பிங், 6 வயதில் இருந்தபோது, அவருடைய அம்மா அவருக்கு வாங்கி கொடுத்த ஓவிய புத்தகங்கள்.
சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் அவருடைய தாயும்

ஷிச்சின்பிங், 6 வயதில் இருந்தபோது, அவருடைய அம்மா அவருக்கு வாங்கி கொடுத்த ஓவிய புத்தகங்கள்.

பண்டைக்காலத்தில், நாட்டுப்பற்று பற்றிய மிக உயரிய கதைகள் இப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன.

ஷி ஜின்பிங்கின் தாய், தன் குழந்தைகளை நன்றாக கவனித்ததோடு, கடின உழைப்பாளியாகவும் இருந்தார். எனினும் அவர் எளிமையான வாழ்க்கை வாழ்வதையே இலட்சியமாக கொண்டுள்ளார். அவரது அறிவுரையின்படி ஷிச்சின்பிங்கும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

தாய், சகோதரன், சகோதரி ஆகியோர் ஷிச்சின்பிங் எடுத்துக்கொண்ட நிழற்படம்.

அவரது பெற்றோரின் அனுபவங்கள் மற்றும் முயற்சி ஷி ஜின்பிங்கிற்கு மேலதிகமான செல்வாக்கை ஏற்படுத்தி கொடுத்துள்ளன.

நகரத்தில் படித்த இளைஞர்கள், ஏழ்மை மற்றும் நடுத்தர நிலையில் இருந்த விவசாயிகளிடமிருந்து அனுபவக் கல்வியைப் பெற வேண்டியது அவசியம் என்று தலைவர் மாவ் சே தொங் 1968ஆம் ஆண்டு டிசம்பர் 22-ஆம் நாள் தெரிவித்திருந்தார்.  அவரின் விருப்பப்படி,  சீனா முழுவதிலும் உள்ள பள்ளிகளில்  படித்துக் கொண்டிருந்த ஒரு கோடியே 70 இலட்சம் இளம் மாணவர்கள், தங்களது ஊர்களிலிருந்து புறப்பட்டு, கிராமங்களுக்குச் சென்றனர்.

அப்போது, இளைஞராக இருந்த ஷிச்சினிபிங் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டு, சீனப் புரட்சித்தலமாக கருதப்பட்ட யான் ஆன் நகருக்குச் சென்றார்.

ஷிச்சின்பிங் கிராமத்தில் இருந்தபோது, அவருடைய தாய் அவருக்கு வழங்கிய பையின் காட்சி.

2001ஆம் ஆண்டு சீனாவின் மிக முக்கியமான திருநாளான வசந்த விழாவின்போது, ஃபூச்சியன் மாநில ஆளுநராக இருந்த ஷி ஜின்பிங், பணி என்ற காரணத்தால், பெய்ஜிங்கில் வாழ்ந்த பெற்றோரைச் சந்திக்க வரவில்லை. இதனால், ஷிச்சின்பிங் தொலைபேசி மூலம் தாயிடம் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அலுவலகத்தில் அவர் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர்களுடன் எடுத்துக் கொண்ட பல நிழற்படங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றான இது, அவரும் அவரது தாயும் கையோடு கைகோர்த்து உலா சென்ற நிழற்படமாகும்  தாயின் அறிவுறை அவருக்கு முழு வாழ்விலும் நிதியை கற்றுக் கொடுத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com