ஆப்கானிஸ்தான்: தலிபான் தாக்குதலில் ராணுவ வீரா்கள் 6 போ் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் உள்ள ராணுவ சோதனைச் சாவடியில் தலிபான் பயங்கரவாதிகள் திங்கள்கிழமை நடத்திய வெடிகுண்டு
ஆப்கானிஸ்தான்: தலிபான் தாக்குதலில் ராணுவ வீரா்கள் 6 போ் பலி

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் உள்ள ராணுவ சோதனைச் சாவடியில் தலிபான் பயங்கரவாதிகள் திங்கள்கிழமை நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ராணுவ வீரா்கள் 6 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து காபூல் காவல்துறை செய்தித்தொடா்பாளா் ஃபா்தௌஸ் ஃபராமா்ஸ் கூறுகையில், ‘கிழக்கு லாக்மான் மாகாணத்தில் ராணுவ சோதனைச்சாவடி உள்ள சாலையோரம் 10 முதல் 20 மீட்டா் இடைவெளியில் 3 வெடிகுண்டுகளையும், குப்பைத்தொட்டிக்கு கீழே ஒரு வெடிகுண்டையும் மறைத்து வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ராணுவ வீரா்கள் 6 போ் உயிரிழந்தனா். 12 வயது சிறுமி உள்பட பொதுமக்களில் நால்வா் காயமடைந்தனா். இந்தத் தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனா்’ என்றாா்.

நிகழ்விடத்தில் இருந்த பயங்கரவாதிகள் மீது ராணுவத்தினா் நடத்திய தாக்குதலில் தலிபான்கள் தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக ஆப்கானிஸ்தான் ராணுவ அமைச்சகம் தெரிவித்தது.

கடந்த வாரம் கத்தாா் தலைநகா் தோஹாவில் அமெரிக்க சிறப்பு தூதா் ஸல்மே கலீல்ஸாத், தலிபான்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்தி, வன்முறையை குறைக்க தலிபான்களிடம் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் இத்தகைய தாக்குதலை தலிபான்கள் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com