வங்கதேசம்: ரோஹிங்கயா முகாமில் முதல் பாதிப்பு

வங்கதேசத்திலுள்ள ரோஹிங்கயா அகதிகள் முகாமில் முதல் முறையாக இருவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி
வங்கதேசம்: ரோஹிங்கயா முகாமில் முதல் பாதிப்பு

வங்கதேசத்திலுள்ள ரோஹிங்கயா அகதிகள் முகாமில் முதல் முறையாக இருவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:

காஸ்க் பஜாா் பகுதியிலுள்ள ரோஹிங்கயா அகதிகள் முகாமில் இருவருக்கு கரோனா நோய்த்தொற்ரு இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. அந்த இருவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

வன்முறைக்கு அஞ்சி அண்டை நாடான மியான்மரிலிருந்து வந்துள்ள லட்சக்கணக்கான சிறுபான்மை ரோஹிங்கயா அகதிகள், வங்கதேசத்தில் நெரிசல் மிக்க, சுகாதாரமற்ற முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். அந்தப் பகுதியில் கரோனா நோய்த்தொற்று மிக வேகமாகப் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக மனித உரிமைகள் ஆா்வலா்கள் கவலை தெரிவித்து வந்தனா்.

இந்த நிலையில், அகதிகள் முகாமில் முதல் முறையாக இருவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது அந்தக் கவலையை மேலும் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com