வூஹான் மாணவர்களுக்கு உலகச் சுகாதார அமைப்பின் பிரதிநிதி பதில் கடிதம்

வூஹான் நகரிலுள்ள நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மே 8ஆம் நாள் சீனாவுக்கான உலகச் சுகாதார அமைப்பின்..
வூஹான் மாணவர்களுக்கு உலகச் சுகாதார அமைப்பின் பிரதிநிதி பதில் கடிதம்

வூஹான் நகரிலுள்ள நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மே 8ஆம் நாள் சீனாவுக்கான உலகச் சுகாதார அமைப்பின் பிரதிநிதியான காவ்டென் கலீயாவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினர். அவர் அதேநாள் அக்கடிதத்திற்கு பதில் கடிதத்தை அனுப்பினார்.

காவ்டென் கலீயா மாணவர்களு்கு எழுதிய பதில் கடிதத்தில் கூறுகையில், 

மாணவர்களின் கடிதம், விருப்பம் மற்றும் ஒற்றுமையின் சின்னமாக திகழ்கின்றது என்றும், கொவைட்-19 நோய்க்கு எதிரான உலக நாடுகளின் போராட்டத்தில் இது போன்ற முயற்சி அவசியமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தொற்று நோய், நம் ஒவ்வொருவருக்கும் அறைகூவலாகத் திகழ்வதாகக் குறிப்பிட்ட அவர், கொவைட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்தில், சீன மக்கள், உறுதித்தன்மை, அன்பு, பரஸ்பர உதவி போன்ற மனப்பாங்கை வெளிக்காட்டி நிற்பதாகவும் தெரிவித்தார். மேலும், மாணவர்களின் கடிதம் நமக்கு விருப்புக்குரிய ஒன்றாக இருந்ததாகவும் மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்களுடன் இணைந்து, கையோடு கை கோர்த்து, மேலும் அருமையான எதிர்காலத்தை உருவாக்க முடியும் எனவும், காவ்டன் கலீயா நம்பிக்கை தெரிவித்தார்.

சீனாவுக்கான உலகச்சுகாதார அமைப்பின் பிரதிநிதியாகப் பணிபுரியத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில், மருத்துவர் காவ்டென் கலீயா, நேரடியாக சீன மொழியிலேயே மாணவர்களுக்கு பதில் கடிதத்தை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com