கரோனா: ஒடிசா, பிகார், ராஜஸ்தான் பாதிப்பு நிலவரம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டோர் விவரத்தை ஒடிசா, பிகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 
கரோனா: ஒடிசா, பிகார், ராஜஸ்தான் பாதிப்பு நிலவரம்


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டோர் விவரத்தை ஒடிசா, பிகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 

ஒடிசா

ஒடிசாவில் மேலும் 65 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 737 ஆக உயர்ந்துள்ளது. இதில் 568 பேர் சிகிச்சையில் உள்ளனர், 166 பேர் குணமடைந்துள்ளனர், 3 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை ஒடிசா மாநிலத்தில் 86,140 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

பிகார்

பிகாரில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

இதுவரை பிகாரில் கரோனா தொற்றுக்கு 1,033 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 438 பேர் இதுவரை நோயிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். 

ராஜஸ்தான் 

ராஜஸ்தானில் இன்று காலை 9 மணி நிலவரப்படி நேற்று ஒரே நாளில் புதிதாக 91 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து அங்குப் பாதிப்பு எண்ணிக்கை 4,838 ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 125 ஆகவும் உயர்ந்துள்ளது. 1,941 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர் என்று அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com