கரோனா காலத்தில் சீனாவில் இணையவகுப்பின் வழி 18 கோடி மாணவர்கள் பயன்

கரோனா வைரசின் திடீர் பாதிப்பு காரணமாக நாடளவில் உள்ள தொடக்க நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும்
கரோனா காலத்தில் சீனாவில் இணையவகுப்பின் வழி 18 கோடி மாணவர்கள் பயன்

கரோனா வைரசின் திடீர் பாதிப்பு காரணமாக நாடளவில் உள்ள தொடக்க நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் சுமார் 18 கோடி மாணவர்கள் பயன் பெறும் நோக்கில் சீனா மிகப் பெரிய அளவிலான இணையவழி வகுப்புகளை நடத்தியது.

இதனால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் படிப்புகளைத் தொடர முடிந்ததோடு, கல்வி மூலவளங்களைப் பகிர்ந்து கொள்ளவும் முடிந்ததாக சீன கல்வி அமைச்சகத்தின் அதிகாரி லியு யூ காங் 14ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

இந்த இணையவழி வகுப்பில் உயர் கல்வி வெளியீட்டகம் மற்றும் சிங்குவா பல்கலைக்கழகம் முறையே வழங்கிய இணையதள வகுப்புகள், ஐ.நாவின் யுனேஸ்கோவுக்கான உலகக் கல்விக் கூட்டணியில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சீனாவின் இணையதளக் கல்விக்கான சர்வதேச மேடை சீனாவுக்கு மட்டுமல்லாமல், முழு உலகத்திற்கும் துணை புரிந்துள்ளதாக யுனேஸ்கோ அமைப்பின் அறிவியல் கொள்கை மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் தலைவர் பெக்கி ஓட்டி போடெங் அம்மையார் தெரிவித்துள்ளார். 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com