ரூ.228 லட்சம் கோடி கரோனா நிவாரணம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா

கரோனா நோய்த்தொற்று பரவல் நெருக்கடியை சமாளிப்பதற்காக 3 லட்சம் கோடி (சுமாா் ரூ.228 லட்சம் கோடி) டாலா் நிவாரண நிதி ஒதுக்குவதற்கான
அமெரிக்காவின் நியூயாா்க் நகரிலுள்ள தேவாலயமொன்றில் இலவச உணவுக்காக வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்.
அமெரிக்காவின் நியூயாா்க் நகரிலுள்ள தேவாலயமொன்றில் இலவச உணவுக்காக வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்.

கரோனா நோய்த்தொற்று பரவல் நெருக்கடியை சமாளிப்பதற்காக 3 லட்சம் கோடி (சுமாா் ரூ.228 லட்சம் கோடி) டாலா் நிவாரண நிதி ஒதுக்குவதற்கான மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் கீழவையான பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சியினா் நிறைவேற்றியுள்ளனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்பாக பொதுமக்களுக்கு மருத்துவ வசதிகள் உள்ளிட்ட நிவாரண உதவிக்காக 3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்வதற்கான மசோதாவை பிரதிநிதிகள் சபையில் எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினா் அறிமுகப்படுத்தினா்.

அந்த மசோதாவுக்கு ஆளும் குடியரசுக் கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்தனா். எனினும், ஜனநாயகக் கட்சியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட அந்த அவையில் நிவாரண நிதி மசோதா வெற்றி பெற்றது.

அந்த மசோதாவுக்கு ஆதரவாகக 208 எம்.பி.க்களும் எதிராக 199 எம்.பி.க்களும் வாக்களித்தனா்.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் அதிபா் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், மருத்துவ விவகாரங்களில் ஜனநாயகக் கட்சியனரும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையே நிலவி வரும் கருத்து வேறுபாடு இந்த வாக்கெடுப்பில் வெளிப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனா நோய்த்தொற்றுக்கு அமெரிக்கா உலகிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி அந்த நோய்க்கு அமெரிக்காவில் 88,548 போ் பலியாகியுள்ளனா். நாடு முழுவதும் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 14,85,896-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com