பெய்ஜிங் மற்றும் ஷாங்காங் மாநகரில் ஜூன் 2ல் பள்ளிகள் துவங்கும்

ஷாங்காய் மாநகரில் அனைத்து துவக்கப் பள்ளிகளும் அரசு சார் குழந்தை காப்பகங்களும் ஜூன் 2ஆம் தேதிக்குள் படிப்படியாக முழுமையாக திறக்கப்பட்டுவிடும்.

பெய்ஜிங் மாநகரில் ஜூன் 1ஆம் நாள், 6ஆவது வகுப்பு முதல் 8ஆவது  வகுப்பு வரை மாணவர்களும் இதர உயர் வகுப்பு மாணவர்களுடன் சேர்ந்து பள்ளிகளுக்குத் திரும்புவர் எனத் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் மே 18ஆம் நாள் முதல் பெய்ஜிங் மாநகரில் பேருந்துகளின் இயக்கத் திறன் 90 விழுக்காடாகவும், சுரங்க ரெயிலின் இயக்கத் திறன் 80 சதவீதமாகவும் இருக்கும்.

சீனாவில் இவ்விரு மாநகரங்களில் உற்பத்தி மற்றும் வாழ்க்கை ஒழுங்குமுறை விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதை இந்த மாற்றங்கள் காட்டுகின்றன.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com