50 ஆயிரம் கோடி டாலர் நிதியை செலவிடாமல் வைத்திருக்கும் அமெரிக்கா: புலனாய்வு முடிவு

கரோனா வைரஸ் பரவலை அமெரிக்க அரசு சமாளிப்பதைக் கண்காணித்து வரும் வகையில் அமெரிக்க
50 ஆயிரம் கோடி டாலர் நிதியை செலவிடாமல் வைத்திருக்கும் அமெரிக்கா: புலனாய்வு முடிவு

கரோனா வைரஸ் பரவலை அமெரிக்க அரசு சமாளிப்பதைக் கண்காணித்து வரும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேற்பார்வைக் குழு உள்ளூர் நேரப்படி 18ஆம் நாள் புலனாய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

புலனாய்வு முடிவின் படி, இவ்வாண்டின் மார்ச் திங்களில், நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 2 இலட்சம் கோடி பொருளாதார நிதியுதவி மசோதாவில் 50 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் நிதியம், மேலாண்மைப் பிரச்சினையின் காரணமாக செலவிடப்படாமல் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  3750 கோடி டாலர் மட்டுமே செலவிடப்பட்டுள்ளன. அமெரிக்காவில் உள்ள பல தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்களைப் பணி நீக்கம்  செய்து, திவாலாகும் நிலையில் சிக்கயுள்ள போதிலும், 50 ஆயிரம் கோடி டாலரில் பெரும்பான்மை செலவிடாமல்  தொடர்ந்து நிதி அமைச்சகத்திடம் வைத்திருக்கிறது. 

இந்நிலையில், நிதி அமைச்சகம் இந்த நிதியுதவியைப் பயன்படுத்துவதில், தொழில் நிறுவனங்களுக்கு எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் உறுப்பினர் எலிசபெத் வாரன் குற்றம் சாட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com