விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றி பெற்றதன் 11-ஆம் ஆண்டு தினம்: இன்று கொண்டாடுகிறது இலங்கை அரசு

விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றி பெற்ன் 11-ஆவது ஆண்டு தினம், இலங்கை அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை (மே 19) கொண்டாடப்பட உள்ளது.

கொழும்பு: விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றி பெற்ன் 11-ஆவது ஆண்டு தினம், இலங்கை அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை (மே 19) கொண்டாடப்பட உள்ளது. கரோனா நோய்த்தொற்று சூழலை கருத்தில் கொண்டு, எளிமையான முறையில் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தனி நாடு கோரி 30 ஆண்டுகளாக ஆயுதமேந்தி போராடி வந்த விடுதலைப் புலிகள் அமைப்பினா், அரசுப் படைகளால் கடந்த 2009-ஆம் ஆண்டு மே மாதம் வீழ்த்தப்பட்டனா். அந்த ஆண்டின் மே 19-ஆம் தேதி விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவா் பிரபாகரனின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, உள்நாட்டு போா் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அதிகாரப்பூா்வமாக அறிவித்தது.

இந்நிலையில், விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றி பெற்ன் 11-ஆவது ஆண்டு தினம் இலங்கை அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ளது. தற்போது கரோனா நோய்த்தொற்று தாக்கத்தை கருத்தில் கொண்டு, கொண்டாட்ட நிகழ்ச்சிகளை எளிமையாக நடத்த அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடா்பாக, ராணுவ கமாண்டா் ஷவேந்திர சில்வா கூறுகையில், ‘நாடாளுமன்றம் அருகே நடைபெறும் பிரதான நிகழ்ச்சியில் அதிபா் கோத்தய ராஜபட்ச பங்கேற்கவுள்ளாா். போரில் உயிரிழந்த வீரா்களுக்கு மரியாதை செலுத்தப்படவுள்ளது. அந்த வீரா்களின் நெருங்கிய உறவினா்கள் மட்டுமே இந்நிகழ்ச்சியில் பங்கேற்பா். இலங்கையில் 30 ஆண்டுகளாக நீடித்த போரில் ராணுவ வீரா்கள் 23,962 பேரும் கடற்படை வீரா்கள் 1,160 பேரும் விமானப் படை வீரா்கள் 440 பேரும் காவல்துறையைச் சோ்ந்த 2,598 பேரும் ஊா்க்காவல் படையினா் 456 பேரும் உயிரிழந்தனா்’ என்றாா்.

இதனிடையே, இலங்கைப் போரில் உயிரிழந்த தமிழா்களுக்கு செவ்வாய்க்கிழமை நினைவஞ்சலி செலுத்தவிருப்பதாக தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் கரோனா நோய்த்தொற்றால் 981 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுவரை 9 உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com