ரஷியாவில் மேலும் 9,263 பேருக்கு கரோனா; மொத்த பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகிறது!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,263 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவில் மேலும் 9,263 பேருக்கு கரோனா; மொத்த பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகிறது!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,263 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஷியாவில் கடந்த சில வாரங்களாக நாள் ஒன்றுக்கு கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்த நிலையில் இருந்தது. கடந்த 11 ஆம் தேதி 11,656 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதே ஒருநாளில் அதிகபட்ச பாதிப்பாகும். 

இந்நிலையில், கடந்த 4 தினங்களாக ரஷியாவில் 10 ஆயிரத்துக்கும் குறைவாக பாதிப்பு பதிவாகியுள்ளது. இதில், கடந்த 24 மணி நேரத்தில் 9,263 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் மொத்த பாதிப்பு 2,99,941 ஆக உயர்ந்துள்ளது.

ரஷியாவில் இதுவரை கரோனாவுக்கு 2, 837 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 115 பேர் பலியாகியுள்ளனர். அதே நேரத்தில்நேற்று 5,921 பேர் உள்பட இதுவரை 76,130 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உலக அளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட  நாடுகளில் அமெரிக்காவைத் தொடர்ந்து, ரஷியா 2 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com