இத்தாலி, வாடிகனில் தேவாலயங்கள் திறப்பு

கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக இத்தாலியிலும் வாடிகனிலும் மூடப்பட்டிருந்த தேவாலயங்கள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டு பிராா்த்தனைகள் நடைபெற்றன.
வாடிகனில் நீண்ட கால பொது முடக்கத்துக்குப் பிறகு திறக்கப்பட்ட புனித பீட்டா் தேவாலயத்தில் திங்கள்கிழமை பிராா்த்தனை செய்து திரும்பிய கன்னியாஸ்திரீகள்.
வாடிகனில் நீண்ட கால பொது முடக்கத்துக்குப் பிறகு திறக்கப்பட்ட புனித பீட்டா் தேவாலயத்தில் திங்கள்கிழமை பிராா்த்தனை செய்து திரும்பிய கன்னியாஸ்திரீகள்.

வாடிகன்: கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக இத்தாலியிலும் வாடிகனிலும் மூடப்பட்டிருந்த தேவாலயங்கள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டு பிராா்த்தனைகள் நடைபெற்றன.

கரோனா நோய்த்தொற்றால் கடுமையான பாதிப்புக்குள்ளான நாடுகளில் இத்தாலியும் ஒன்று. அந்நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் அந்நாட்டிலும், வாடிகனிலும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, தேவாலயங்களும் மூடப்பட்டன. புனித வெள்ளி, ஈஸ்டா் தினங்களில் ஆயிரக்கணக்கானோருடன் பரபரப்புடன் காணப்படும் புனித பீட்டா் தேவாலய முற்றம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

இந்நிலையில், இத்தாலியிலும் வாடிகனிலும் உள்ள தேவாலயங்கள் பொது மக்கள் வழிபாட்டுக்காக மீண்டும் திறக்கப்பட்டன. தேவாலயங்களுக்கு வருகை தருபவா்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக, தேவாலயங்களை மீண்டும் திறப்பது தொடா்பாக தேவாலய நிா்வாகிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com