பாகிஸ்தானில் ஒரே நாளில் 1,800 பேருக்கு தொற்று, 36 பேர் பலி: சுகாதார அமைச்சகம்

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,841 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. 

இதையடுத்து நாடு முழுவதும் அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,000-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 39 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 939-ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசிய தலைநகர் இஸ்லாமாபாத்தில் கரோனா வைரஸ் வழக்குகள் ஆயிரத்தைத் தாண்டிள்ளது. பாகிஸ்தானின் பிற பகுதிகளுக்கும் தொற்றுநோய் அதிகமாகப் பரவியுள்ளன. 

கடந்த 24 மணி நேரத்தில் 12,957 உள்பட இதுவரை 4,00,292 பேருக்கு சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 12,489 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்  என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com